1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (14:43 IST)

3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் குடியுரிமை துறப்பு! – மத்திய அரசு பகீர் தகவல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறிய மக்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020ம் ஆண்டில் 85,256 பேரும், 2021ம் ஆண்டில் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் 5,220 வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.