1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2016 (10:42 IST)

என்.டி.டி.வி.யை தொடர்ந்து மத்திய அரசு தடை செய்யும் இரு தனியார் சேனல்கள்!!

என்.டி.டி.வி.யை தொடர்ந்து மேலும் இரண்டு தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்பை ஒருவாரம் வரை தடை செய்ய விதித்து மத்திய ஒலிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.


 
 
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது என்.டி.டி.வி. இந்தியா சேனல் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முக்கிய விபரங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டி நவம்பர் 9ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை ஒளிபரப்பிற்கு தடை விதித்து மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
 
இந்த தடைக்கு மத்திய அரசை பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், 'நியூஸ் டைம் அஸ்ஸாம்' என்ற தனியார் சேனலுக்கும், ‘கேர் வோர்ல்ட் டி.வி.சேனல்’ என்ற சேனலுக்கும் வரும் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்பு தடை விதித்து ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இச்சம்பவம் குறித்து சேனல் தரப்பில் உரிய விளக்கம் அளித்த பின், ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கமிட்டி ஆலோசித்த பின் இந்த தடை வித்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.