செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:37 IST)

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கு கருணை மதிப்பெண்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
கடந்த மாதம் 5-ம் தேதி சிபிஎஸ்இக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. இதில் கடந்த மாதம் 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கான வினாத்தாளில் குறிப்பிட்ட ஒரு கேள்வியில் அச்சுப்பிழை இருந்தது.
 
இது குறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ வாரியத்துக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து, சிபிஎஸ்இ வாரியம் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தது.