திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (13:44 IST)

ஜனாதிபதி பாதுகாப்புப் படையில் சாதி பாகுபாடு – நீதிமன்றத்தில் வழக்கு !

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியவர்களுக்கு வழஙக்ப்படும் உயர்தரப் பாதுகாப்புகளில் உள்ள காவலர்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரியவர் இந்திய குடியரசுத் தலைவர். அதேப் போல மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும் இந்தியாவின் சக்தி வாய்ந்த ஆளுமையாவார். இந்த இரண்டுப் பதவிகளில் இருப்பவருக்கும் இந்தியாவின் உயர்தரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கறுப்புப் படை, வெள்ளைப் படை, இஸட் பிளஸ் ஆகிய 3 பிரிவுகளின் கீழும் இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது உலக நாடுகளின் எந்த தலைவர்களுக்கும் கொடுக்கப்படும் பாதுகாப்புக்கும் இணையானது. இந்த பாதுகாப்புப் படையில் இருக்கும் காவலர்கள் அனைவரும் மிக கடினமான பயிற்சிகளுக்குப் பிறகே நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் காவலர்களில் சாதியப் பாகுபாடு மற்றும் முன்னுரிமை அளிக்கபப்டுவதாக ஹரியானாவைச் சேர்ந்த கௌரவ் யாதவ் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தொடுத்த மனுவில் ‘2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் சேர நான் விண்ணப்பித்திருந்தேன். அனைத்து தேர்வுகள் மற்றும் நேர்காணலிலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். ஆனாலும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை. வீரர்கள் தேர்வில் சாதிக்கு முன்னுரிமை வழஙகப்படுகிறது. வீரர்கள் தேர்வில்  ஜாட், ராஜ்புட் மற்றும் ஜாட் சீக்கியர்கள் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ‘ எனக் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை, ராணுவத் தளபதி, குடியரசுத்தலைவர் பாதுகாப்புப் படையின் அதிகாரி, ராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரி ஆகியோர் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சர்ச்சையான இந்த வழக்கால் இந்திய அரசியலில் புதிய சர்ச்சைக் கிளம்பியுள்ளது.