ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (19:13 IST)

தாம்பூல பையில் மதுபாட்டில் வைக்கப்பட்ட விவகாரம் - ரூ.50 ஆயிரம் அபராதம்

Pondicherry
பாண்டிச்சேரியில்  உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் வைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த  நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மே 28 ஆம் தேதி, பாண்டிச்சேரியில்  உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது,  தாம்பூல பையில் ஒரு குவாட்டர் பாட்டிலையும் வைத்து விருந்தினர்களுக்கு பெண் வீட்டார் கொடுத்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.

தாம்பூல பையில் குவாட்டர் பாட்டிலை எடுத்து வைப்பதை பார்த்த விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதற்கு சமூகவலைதளங்களில்  விமர்சனம் வலுத்தது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், தாம்பூல பையில் மதுபானம் சேர்த்து வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது.