திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 7 மே 2017 (12:30 IST)

காதலை சேர்த்து வைக்க மோடிக்கு கடிதம் எழுதிய இளைஞர்!

காதலை சேர்த்து வைக்க மோடிக்கு கடிதம் எழுதிய இளைஞர்!

நாட்டின் பிரதமர் மோடிக்கு நாடு முழுவதில் இருந்து பலரும் கடிதங்கள் எழுதி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுடன் கடிதம் எழுதுவார்கள். ஆனால் ஒரு இளைஞர் தன்னுடைய காதலை சேர்த்து வைக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 
 
பிரதமரின் குறை தீர்க்கும் பிரிவுக்கு பல விசித்திரமான கோரிக்கைகளுடன் கடிதங்கள் வருவதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்களில் 60 சதவீத கடிதங்கள் நகைச்சுவையான கோரிக்கைகளுடன் வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
தோட்டத்தில் இருந்து திருட்டுத்தனமாக பூக்களை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் வருகிறதாம். இந்நிலையில் சமீபத்தில் சண்டிகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுபோன்ற அர்த்தமற்ற கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியுள்ளார்.
 
சண்டிகரில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வரும் அந்த இளைஞர் பிரதமர் மோடிக்கு எழுதிய அந்த கடிதத்தில், தனது வீட்டிலும், தனது காதலி வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் வாங்க தன்னார்வலர் ஒருவரை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.