வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (11:35 IST)

மூச்சே விட முடியல.. டெல்லியை சூழ்ந்த காற்றுமாசு! செயற்கை மழைதான் ஒரே வழி? - டெல்லி அரசு கோரிக்கை!

Delhi mist

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றுமாசு உச்சமடைந்து வரும் நிலையில் செயற்கை மழை பெய்விக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது டெல்லியில் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடுவதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகிறது. அதேசமயம் செயற்கை மழையை பெய்ய வைத்தால் டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு டெல்லி அரசின் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K