செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (19:41 IST)

மாநில முதல்வரை யாராவது இப்படி சொல்வாங்களா....? இதை நீங்களே பாருங்க..

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது உடலைமைப்பை மிக மோசமாக வர்ணித்து லோக்தந்திரிக் ஜனதாளக் கட்சியின் தலைவர்  சரத் யாதவ் பேசியுள்ளது கடுமையாக விமர்சனத்துக்கு  ஆளாகியுள்ளது.
வசுந்தரா ராஜேவின் உடலமைப்பை மிக குண்டாக இருப்பதாக பேசியது இன்று இந்திய அளவில் கடும் விவாதித்திற்கு ஆளாகியுள்ளது.
 
இதனால் கடும் கோபமடைந்த வசுந்தரா ராஜூ தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து சரத்யாதவ்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
 
இது குறித்து சரத்யாதவ் கூறுயதாவது:
 
’நான் தவறாக பேசியிருந்தால் அதற்கு  வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.டெல்லியில் நான் வசுந்தராவின் அறிக்கையை பார்த்தேன். மேலும் எங்கள் இரு குடும்பத்துக்கும் நீண்ட கால நட்பு இருக்கிறது.  நான் பேசியது வசுந்தராவின் மனம் புண்பட்டிருக்குமானால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.