ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (09:51 IST)

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

"50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக மத்திய அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் டாடா என்பவர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மத்திய அமைச்சர் குமாரசாமி தன்னுடைய வீட்டிற்கு வந்தும், செல்போன் மூலமும் பேசினார் என்றும், தேர்தல் செலவுக்கு 50 கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினார் என்றும், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய நிலையில், பணம் தராவிட்டால் பெங்களூரில் எந்த தொழிலும் செய்ய முடியாது, ஊரை காலி செய்து விட்டு ஓட வேண்டியிருக்கும் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ரமேஷ் கவுடா என்பவர் கட்டி வரும் கோவிலுக்கு நன்கொடையாக 5 கோடி ரூபாய் கேட்டார் என்றும், அதற்கும் நான் மறுப்பு தெரிவித்ததால், அவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ரமேஷ் கவுடா மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு குமாரசாமி மற்றும் அவரது கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்."


Edited by Siva