செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (12:01 IST)

உத்தர பிரதேசத்தில் ஜேசிபி மீது மோதிய பேருந்து: 17 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜேசிபியும் பேருந்தும் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

 
லக்னெளவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து கான்பூர் அருகே ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதிச் சிதைந்தது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதியும், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.