1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (17:32 IST)

தாய் இறந்தது கூட தெரியாமல் அருகில் தூங்கிய மகன் - மனதை உலுக்கிய சம்பவம்

தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல், 5 வயது சிறுவன் அருகிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் உலுக்கியுள்ளது.

 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிப்பவர் சமீனா சுல்தானா. இவரின் கணவர் அயூர் 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்துவிட்டார். இதனால், அவர் தன்னுடைய 5 வயது மகனோடு வசித்து வந்தார். 
 
அந்நிலையில், சமீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அயூப் அவரை உஸ்மானிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விட்டு சென்று விட்டார். உதவிக்கு யாருமில்லாத நிலையில், திடீரெனெ ஏற்பட்ட நெஞ்சுவலியில் சமீனா இறந்துவிட்டார்.
 
ஆனால், தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் 5 வயது மகன், அவரின் அருகிலேயே 2 மணி நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். இதை பார்ப்பவரின் மனதை உருக்கியது. அதன்பின், அவரது தாயை வேறு ஒரு அறைக்கு மாற்றுவதாக கூறி அங்கிருந்த செவிலியர்கள், சமீனாவின் உடலை பிரதே பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் அந்த சிறுவனை சமீனாவின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.