நாய் பால் குடித்து வளரும் சிறுவன் : ஆறு வருடங்களாய் அதிசயம்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுவன் 6 வருடங்களாய் நாய் பால் குடித்து வருவதை பழக்கமாக வைத்திருக்கிறான் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் தனபாத் எனும் ஊரில் வசிப்பர் சுபேந்தர் சிங். இவர் சாலையோரம் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 10 வயதில் மொகித்குமார் என்ற மகன் இருக்கிறான். அந்த சிறுவன் தனது 4 வயது முதல் நாய் பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறான்.
மொகித் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நாயின் அருகில் சென்று அதனிடம் பால் குடித்துள்ளான். அந்த நாயும் அதற்கு ஒத்துழைத்து பால் கொடுத்துள்ளது. நாளடைவில் மொகித் குமாருக்கு அதுவே பழக்கமாகிவிட்டது.
ஒருமுறை வேறொரு நாயிடம் பால் குடிக்க முயன்று, அந்த நாய் மொகித்குமாரை கடித்துவிட்டது. ஆனாலும், அவனிடம் இந்த பழக்கம் போகவில்லை என்று அவனின் தாய் கூறுகிறார்.
இந்த பழக்கத்தை தடுக்க அவனது பெற்றோர்கள் பல வழிகளில் முயன்றும் பலனில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர்கள் அவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.