1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (17:28 IST)

ஆமிர்கான் மற்றும் நசிருதீன் ஷா ஆகிய இருவரும் துரோகிகள் - ஆர்.எஸ்.எஸ். விமர்சனம்

சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா  நம் நாட்டில் போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள் என விமர்சித்தார். இது குறித்து அவர் தன் கருத்தை யுடியூபில் பதிவுவேற்றியுள்ளார். 
அந்த வீடியோவில் 'எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலை கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்'. மேலும் அவர் கூறிய சில கருத்துக்கள் தேசிய அளவில்  பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது.
 
அதாவது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷெஹரில் பசுவதையை எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்பட இருவர் பலியான சம்பவம் தொடர்பான பின்னணியில் அவரது கருத்தை சில வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர்.
 
தற்போது நாதிர்ஷாவை மற்றும் ஆமிர்கான் ஆகிய இருவர் மீதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
 
அவர்கள் பேசியதாவது: ஆமிர்கான் மற்றும் நசிருதீன் ஷா ஆகிய இருவரும் திறமையான நடிகர்களாக உள்ள போதிலும் மரியாதைக்கு உரியவர்கள் அல்லாத துரோகிகள் என்று கூறியுள்ளனர்.