ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (18:37 IST)

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் மத்தியில் பரபரப்பு

central
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 2 ரயில் நிலையங்களில் மோப்பநாய் பிரிவு வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை செய்து வருவதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
 வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் பாமகவுக்கு எதிராக திமுக செயல் படுவதாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், மருத்துவமனைகள், கவர்னர் இல்லம் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
 
இதுவரை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை செய்த நிலையில் வெடிகுண்டு பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதுவும் போலி மிரட்டல் தான் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran