வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (15:47 IST)

அனைத்து CRPF பள்ளிகளுக்கும் பறந்த வெடிக்குண்டு மிரட்டல்! காலிஸ்தான் கும்பலின் வேலையா?

CRPF School

சமீபத்தில் டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி மைதானத்தில் குண்டு வெடித்த நிலையில் தற்போது டெல்லி, ஐதராபாத்தில் உள்ள அனைத்து சிஆர்பிஎப் பள்ளிகளுக்கும் வெடிக்குண்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

சமீபகாலமாக விமானங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் டெல்லி ரோகிணியில் உள்ள சிஆர்பிஎப் மைதானத்தில் வெடித்த வெடிக்குண்டால் ஒரு பக்க சுவர் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன.

 

இந்த வெடிக்குண்டு விபத்தை நடத்திய நாங்கள்தான் என காலிஸ்தானிய அமைப்பு ஒன்று டெலிகிராமில் விடுத்த எச்சரிக்கை செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் டெல்லி மற்றும் ஐதராபாத்தில் உள்ள அனைத்து சிஆர்பிஎப் பள்ளிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்த நிலையில் சிஆர்பிஎப் பள்ளிகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K