ஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இன்று புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் பாப்டே.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், 17 ஆம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி அயோத்தி, ரஃபேல் விவகாரம், உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி நேற்று ரஞ்சன் கோகாய் தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் மூத்த நீதிபதி சரத் அரவிந்த பாப்டே, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகாயால் பரிந்துரை செய்யப்பட்டார். பொதுவாக தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது, அந்த பதவிக்கு இன்னொருவரை பரிந்துரை செய்வது வழக்கம். இதன் படி இன்று பாப்டே, தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாப்டேவிற்கு பதவி பிரமானம் செய்துவைக்கிறார். எஸ்.ஏ.பாப்டே உச்சநீதிமன்றத்தின் 47 ஆவது தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.