வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 3 டிசம்பர் 2016 (09:50 IST)

டெபாசிட் ஆகாத கருப்புப் பணம் - அதிர்ச்சியில் மோடி

மத்திய அரசு கணக்குப் போட்ட கோடிக்கணக்கன கருப்புப் பணங்கள், இன்னும் வங்கிகளின் வசம் வராததால் மத்திய அரசு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
அதன்படி மக்களும் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகிறார்கள். மத்திய அரசு கணக்குப்படி ரூ.8.58 லட்சம் கோடி மதிப்புடைய 500 ரூபாய் நோட்டுகளும், ரூ.6.86 லட்சம் கோடி மதிப்புடைய 1000 ரூபாய் நோட்டுகளின் மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. அதாவது ரூ.15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருந்தன.
 
ஆனால், ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான 8ம் தேதி முதல், கடந்த மாதம் 28ம் தேதி வரை 8.45 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே இதுவரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மீதமுள்ள பணங்கள் இதுவைரை டெபாசிட் ஆகவில்லை. டிசம்பர் 30ம் தேதி வரை கெடு இருந்தாலும், அதிகபட்சம்  2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே டெபாசிட் ஆகும் எனத் தெரிகிறது.
 
அப்படியெனில் மீதமுள்ள ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் என்னவானது? அவை அனைத்தும் கருப்புப் பணங்களா? அந்த பணத்தை வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் டெபாசிட் செய்யாமலேயே போய் விடுவார்களா? இல்லை, அது ஏற்கனவே வங்கிகளில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு விட்டதா? என்று மத்திய அரசு யோசனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.