1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (18:53 IST)

கோவாவிலும் ஆட்சி மாற்றம்: சிவசேனா தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் அந்த கட்சி மாநிலங்களில் ஒவ்வொன்றாக ஆட்சியை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த பாஜக, அடுத்ததாக கோவா மாநிலத்திலும் ஆட்சியில் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக அமித்ஷாவின் மேஜிக்கால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது ஆட்சி அமைத்து வருகிறது 
 
இந்த நிலையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அங்கு காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கோவா மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
இதுகுறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அவர்கள் சூசகமாக தெரிவித்த போது ’மகாராஷ்டிராவை போல் மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் எங்களுடைய மேஜிக் இன்னொரு மாநிலத்திலும் அற்புதம் நிகழ்த்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து கோவாவில் இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது