திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By SInoj
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (14:40 IST)

மாட்டிறைச்சி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கிய பாஜக

modi amithsha
உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்திடம் பாஜக நன்கொடை வாங்கியதாகத் தகவல் வெளியாகிறது.
 
மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் Allana குழுமம். இது உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி  ஏற்றுமதி நிறுவனமாகும். 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வருமான வரித்துறையின் சோதனைக்குப்  பிறகு ஆலானா குழுமம் மீது சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏற்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறது.
 
கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 2 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
2019 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாயும், 2020 ஆம் ஆண்டில் மேலும் 1 கோடி ரூபாயும் ஆலனா குழுமம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளது என தகவல் வெளியாகிறது.