1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (15:42 IST)

பாஜக - சிவசேனா கூட்டணி டம் ...டமார்

பாஜக - சிவசேனா கூட்டணி டம் ...டமார்

பாஜக - சிவசேனா இடையே கூட்டணி முறிந்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது.
 

 
சிவசேனா தொடங்கப்பட்டு 50 ஆவது ஆண்டு நிறைவடைந்தது. இதனையடுத்து, அக்கட்சியின் சார்பில் பொன் விழாக் கொண்டாட்டங்கள் மும்பையில் நடைபெற்றது.
 
இதில், பேசிய அதன் தலைவர் உத்தவ் தாக்கரே, “இந்துத் துவமும், மராட்டிய உணர்வும் நமது இரத்தில் கலந்தது. இதுதான் நமது அடிப்படை உணர்வு.
 
கடந்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைக்க அதன் இந்துத்துவக் கொள்கையே காரணம். இதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்தோம்.
 
விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், நாம் யாரையும் நம்பாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் என்றார்.
 
விரைவில் மும்பையில் நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சிவசேனா தனித்துப்போட்டியிட உள்ளது. இதன் மூலம் பாஜக - சிவசேனா கூட்டணி உடைந்தது.