முதல்வர் மம்தாவிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்: பாஜக
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற பாஜக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி, அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு சிபிஐ வசமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பாரதிய ஜனதா கட்சி கூறிய போது மருத்துவ மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மேற்குவங்க முதல்வர் மம்தா காப்பாற்றி வருகிறார் என்றும் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சர்வாதிகாரி போல் வந்த மம்தா ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் அவரிடமும் காவல்துறை ஆணையர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டால் தான் இந்த வழக்கில் சரியாக இருக்கும் என்றும் பாஜக கூறியுள்ளது.
Edited by Mahendran