1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (19:07 IST)

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி: அமித்ஷா வாக்குறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே பலத்த போட்டி இருக்கும் நிலையில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது 
 
ஒருசில கருத்துக்கணிப்புகள் மம்தா தான் மீண்டும் முதல்வராவார் என்று கூறினாலும் பாஜக இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.  அதுமட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்
பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி: அமித்ஷா வாக்குறுதி
பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில்  தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமித்ஷா அதன்பின் பேசும்போது ’இந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளவை வெறும் வாக்குறுதி அல்ல என்றும, மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான தீர்மான கடிதம் என்றே இதை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் 
 
மாநில அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மேற்குவங்கத்தில் ஊடுருவலை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறிய அமைச்சர் அமித்ஷா, மேலும் மேற்கு வங்கத்தில் முதல் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்
 
70 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் வசித்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு அகதிகள் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் பத்தாயிரம் என மொத்தம் ஐந்து ஆண்டுக்கு வழங்கப்படும் என்றும் அமித்ஷா வாக்குறுதி கொடுத்துள்ளார்