100வது சுதந்திர ஆண்டு கொண்டாடத்தின் போதும் பாஜகவே ஆட்சியில் இருக்கும்:ராம் மாதவ்
2047 வது வருடம் இந்தியா 100ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும். அப்பொதும் பா.ஜ.க.வே ஆட்சியில் இருக்கும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. பிரதம அமைச்சராக மோடி சென்ற வாரம் பதவி ஏற்றார்.
இதனை கொண்டாடும் விதமாக திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பா.ஜ.க. வெற்றிவிழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் ”பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆகியுள்ளார். இதற்கு காரணம் பா.ஜ.க.வின் முந்திய ஆட்சியில் ஜாதி மத பேதமற்ற தேசியத்தை உருவாக்க்கியதுதான்.
வேலையில்லா தன்மையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மோடிக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “2047 ஆவது வருடம் இந்தியா 100 ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும். அப்போதும் பா.ஜ.க.வே ஆட்சியில் இருக்கும்” எனவும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.