1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (19:31 IST)

மம்தா பானர்ஜியை திடீரென சந்தித்த பாஜக எம்பி.. கட்சி மாறுகிறாரா?

Mamtha
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாரதிய ஜனதா கட்சியின் எம் பி ஒருவர் சந்தித்து உள்ளதாகவும் அவருடன் மொத்தம் மூன்று பாஜக எம்பிக்கள் கட்சி மாற இருப்பதாகவும் கூறப்படுவது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்பியும் ராஜ்வன்ஷி சமூகத்தை சேர்ந்த பிரமுகரான அனந்த் மகாராஜ் என்பவர் இன்று மம்தாவை சந்தித்திருப்பதாகவும், அவருடன் சேர்ந்து பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே,  பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் மூன்று எம்பிக்கள் கட்சி மாறினால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டுமானால் மக்களவை சபாநாயகர் பதவியை தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேற்குவங்கத்தில் பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் தங்கள் கட்சி தாவ உள்ளனர் என்ற தகவல்   பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva