’கிரிக்கெட் பேட்டால் ’அதிகாரியை அடித்த பாஜக எம்.எல்.ஏ ! வைரல் வீடியோ

akilesh
Last Updated: புதன், 26 ஜூன் 2019 (17:07 IST)
இந்தூரில் பாஜக எம்.எல்.ஏ வாக இருப்பவர் ஆகாஷ் விஜயவர்கியா. இவர் பாஜக பொதுச்செயலாளரான  கைலாஷ் விஜயவர்கியாவின் மகன்.   இன்று, ஆகாஷ்   மாநகராட்சி அலுவலக அதிகாரியை தன் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சம்பந்தமாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தூரில் உள்ள கஞ்சி காம்பவுண்ட் என்ற பகுதியில் ஒரு   வீட்டை இடிக்க வந்த  மாநகராட்சி அதிகாரிகளை இந்தூர் எம்.எல்.ஏ ஆகாஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்று  கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
 
பொறுப்புள்ள பதவியில் இருப்போர் இந்த மாதிரி அராஜகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
 
மேலும் எம்.எல்.ஏ ஆகாஷ் அந்த வீடியோவில், முனிசிபல்  அதிகாரியை 10 நிமிடத்துக்குள் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியுள்ளார்.
akilesh
இந்நிலையில், இந்தூரின் மற்றொரு எம்.எல்.ஏ ரமேஷ் மண்டோலா இந்த விவகாரம் பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :