திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (08:31 IST)

11 பேரை விடுதலை செய்தது ஏன்? பாகஜ எம்.எல்.ஏ விளக்கம்

11 பேரை விடுதலை செய்தது ஏன் என பாஜக எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார்.
குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவருடைய மூன்று வயது மகளையும் கொலை செய்த 11 பேருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது
 
இதனையடுத்து கடந்த சுதந்திர தினத்தன்று 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்யும் கமிட்டியில் இருந்த பாஜக எம்எல்ஏ ராவுல்ஜி என்பவர் இது குறித்து கூறிய போது பிராமணர்கள் பொதுவாக நல்ல பழக்கம் உடையவர்கள் என்றும் சிறையிலும் அவர்களது நன்றாக இருந்ததால் தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.