1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:31 IST)

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 43 இடங்களில் பாஜக முன்னிலை

சமீபத்தில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநில ஆளுங்கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பகட்ட முடிவுகளின்படி ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 43 தொகுதிகளில் பாஜகவும், ஆளும் டிஆர்எஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 
 
மொத்தம் 150 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி தேர்தலாக இருந்தாலும் இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உட்பட முன்னணி பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஹைதராபாத் மாநகராட்சியை பாஜக கைப்பற்றுமா என்பது இன்னும்  சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது