15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்த ஓபிஎஸ் அணி: பாஜக அதிர்ச்சி..!
பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் அணி 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்துள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில் ஏற்கனவே தான் பாஜக கூட்டணியில் தான் இருப்பதாக ஓபிஎஸ் உறுதி செய்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுக்க பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில் 15 தொகுதிகளுக்கான விருப்பப்பட்டியலை அவர் பாஜக மேலிடத்தில் கொடுத்திருப்பது பாஜக நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிஎஸ் அணிக்கு 15 தொகுதிகள் என்பது அதிகம் என்றும் அது நிறைவேறாத ஆசை என்றும் அதிகபட்சமாக அவருக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனக்கு கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் அவர் தனது இரண்டு மகன்களையும் போட்டியிட வைப்பார் என்றும் அதன் பிறகு தான் அவரது ஆதரவாளர் யாராவது ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்கு தேனி மற்றும் வட சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Mahendran