புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (17:47 IST)

டெல்லி மைதானத்தில் அருண் ஜெட்லிக்கு சிலையா? பிஷன் சிங் பேடி கோபம்!

டெல்லி மைதானத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் சிலை வைக்க பிஷன் சிங் பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக முக்கிய தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அருண் ஜெட்லி. மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. அவர் தலைவராக இருந்தபோது கிரிக்கெட்டுக்காக முக்கியத்துவம் கொடுத்து, புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது அவரது மறைவை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் அவருக்கு சிலை வைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் அதற்கு இப்போது இந்திய முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ‘நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் நான் பொறுமை இழந்துவிடுவேன் எனத் தோன்றுகிறது. அருண் ஜெட்லிக்கு மைதானத்தில் சிலை வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தயவு செய்து என் பெயரை மைதானத்தில் இருக்கும் என் பெயரை நீக்கி விடுங்கள். டெல்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.