புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (17:03 IST)

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறதா மாஸ்டர்? அதிர்ச்சி செய்தி!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப் போகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இந்த படம் பொங்கலுக்கு மிகப் பிரம்மாண்டமாக ரிலிஸாக உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை இன்னும் படக்குழு ஆரம்பிக்கவில்லை. இதனால் பொங்கலுக்கு படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இப்போது மாஸ்டர் ரிலீஸ் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.