புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:19 IST)

ரோட்டில் பணத்தை அள்ளி வீசி பிறந்தநாள் கொண்டாட்டம்! – இளைஞர்கள் கைது!

Gaziapath
டெல்லியில் நடுரோட்டில் பணத்தை அள்ளி வீசி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.



டெல்லி அருகே உள்ள காசியாபாத் பகுதியில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் உயர்ரக கார் ஒன்றில் வரும் மூன்று இளைஞர்கள் மக்கள் கூட்டம் உள்ள இடத்தில் கையாலேயே பட்டாசை கொளுத்தி வானத்தை நோக்கி காட்டியபடி, ரூபாய் தாள்களை அள்ளி வீசுகிறார்.

இதை அங்கிருந்த பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், மக்கள் பலர் அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலையில், இவர்கள் பணத்தை இவ்வாறாக அவமரியாதை செய்கிறார்களே என வருத்தம் தெரிவித்து சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காசியாபாத் காவல் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளதாக காசியாபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K