செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (13:13 IST)

சாலையோர டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்! யாரென்றே தெரியாமல் டீ கொடுத்த கடைக்காரர்..!

இந்தியா வந்துள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் நாக்பூர் அருகே சாலையோர டீக்கடையில்  டீ குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த டீக்கடைக்காரர் பில்கேட்ஸ் யார் என்றே தெரியாமல் அவருக்கு டீ வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது நாக்பூர் சாலையோர டீக்கடை அருகே திடீரென காரை நிறுத்த சொல்லி டீ குடித்தார்

டோலி சாய் பாலா என்ற அந்த டீக்கடை யூட்யூபில் பிரபலம் என்ற நிலையில் அந்த டீக்கடையை பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதனால் தான் அந்த கடைக்கு அவர் டீ சாப்பிட காரை நிறுத்த சொல்லி இருக்கிறார். ஆனால் தனது கடைக்கு வந்தவர் பில்கேட்ஸ் என்பதை அறிந்திராத டீக்கடைக்காரர் அவருக்கு டீ கொடுத்து அவருக்கு மரியாதை கொடுத்துள்ளார்

இஞ்சி ஏலக்காய் போட்டு அருமையாக டீ இருந்ததாகவும் மெய்மறந்து அதை குடித்ததாகவும் தனது சமூக வலைதளத்தில் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டீக்கடைக்காரர் கூறிய போது ’என்னிடம் அவர் டீ கேட்டபோது அவரைப் பற்றி எனக்கு சுத்தமாக தெரியாது, ஆனால் அவர் தனது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட பின்னர் தான் அவர் இவ்வளவு பெரிய நபரா என்று நான் ஆச்சரியப்பட்டேன்’ என்று கூறினார்.

Edited by Mahendran