1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:59 IST)

வீடு, நகைகளை விற்று இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நபர்.. ஆச்சரிய தகவல்..!

தன்னுடைய சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் தரும் இளைஞர் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகாரை சேர்ந்த ராகவேந்திர குமார் என்பவரது நண்பர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றபோது விபத்தில் காலமாகிவிட்டார். இதனை அடுத்து அவர் தனது நண்பன் நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக தனது சொந்த செலவில் ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்க முடிவு செய்தார். 
 
அவர் தன்னிடம் உள்ள பணத்தில் ஹெல்மெட் வாங்கி இலவசமாக கொடுத்த நிலையில் வீட்டை விற்றும் நகைகளை அடகு வைத்தும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறார் 
 
இதுவரை சுமார் 56,000 ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கி உள்ளதாகவும் இன்னும் தன்னிடம் பணம் இருக்கும் வரை ஹெல்மெட் வாங்கி இலவசமாக வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran