பீகாரில் தடையை மீறி மது அருந்திய முன்னாள் ஏம்.எல்.ஏ : வைரல் வீடியோ
பீகாரில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் மது அருந்துவது போல் வெளியான வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், அங்கு மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது. கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டன.
இதைமீறி, மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் வரை, சிறை தண்டனை அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மது குடித்து விட்டு தகராறு செய்பவர்களுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ லலான்ராம் என்பவர் மது அருந்து போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சியையும், தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.