உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு: 13,500 பத்ரிநாத் யாத்ரீகர்களுக்கு பாதிப்பு
உத்தரன்காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பத்ரிநாத் யாத்ரீகர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டம் ஜோஷிமத் என்ற பகுதியில் இருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ள விஷ்ணுபிரயாக்கிற்கு அருகில் ஹதி பார்வத் என்னும் இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் பத்ரிநாத் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொண்டுள்ளதால் யாத்திரைக்கு செல்ல முடியாமலும், யாத்திரைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 13,500 யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க உத்தரகாண்ட் மாநில மீட்புப்படையினர் அதிரடியாக களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் இந்த நிலச்சரிவு மிகக்கடுமையாக இருப்பதால் இந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்று எல்லை சாலைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.