வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (09:00 IST)

50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை

வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. அப்படி மாறாத ஒரு விஷயம் தான் வரதட்சணை. சில முதுகெழும்பில்லாத ஆண்களும், சம்பாதித்து மனைவியை காப்பாற்ற துப்பில்லாத சில கணவன்மார்கள் மனைவியை வரதட்சணை எனும் பெயரால் கொடுமை படுத்தி வருகிறார்கள். கணவனை எதிர்க்கவும் முடியாமல், இந்த கொடுமைகளை பெற்றோரிடமும் கூற முடியாமல் பல பெண்கள் தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள்.
 
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (32), என்பவன் சோழிங்கனல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். இவனுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.
 
திருமணத்தின் போது பெண் வீட்டார் 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
 
பின்பு ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளனர். 
 
இதில்லாமல் வரதட்சணை என்ற பெயரால் எடுத்த பிச்சையெல்லாம் பத்தாமல் சுரேஷ் மேலும் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு ரோகிணியை தினமும் அடித்து சித்ரவதை செய்துள்ளான். இதனால் விரக்தியடைந்த ரோகிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரோகிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய அவரது பிச்சைக்கார கணவன் சுரேஷை தேடி வருகின்றனர்.