1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2025 (09:08 IST)

போபால் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுகள் கழித்து அகற்றப்படும் கழிவுகள்!

Container lorry

மத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில் செயல்பட்ட கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியான சம்பவம் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக இன்றும் மக்கள் நினைவில் நிற்கிறது.

 

 

1984ம் ஆண்டில் ஏற்பட்ட இந்த விஷவாயு கசிவால் போபால் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், கால்நடை விலங்குகள் பரிதாபமாக பலியான நிலையில், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் பல உயிர்களை பலிவாங்கிய வேதியியல் நச்சுக் கழிவுகள் அங்கிருந்து அகற்றப்படாமலே இருந்து வந்தது.

 

நச்சுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற தலையீட்டால் தற்போது அந்த நச்சுக்கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக 12 கண்டெய்னர் லாரிகள் தயாரிக்கப்பட்டு சுமார் 337 மெட்ரிக் டன் அளவிலான நச்சுக்கழிவுகள் அவற்றில் ஏற்றப்பட்டு பிதாம்பூர் கழிவுகளை எரிக்கும் நவீன ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 

இந்த கழிவுகளை அங்கு எரித்து அகற்ற 150 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K