1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2022 (09:01 IST)

பள்ளிப்பாட திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

பள்ளிப்பாட திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கட்டாயம் என குஜராத் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும்,  இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியல் பாடத்தில் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது
 
பகவத் கீதையில் உள்ள கதைகள் ஸ்லோகங்கள் பாடல்கள் கட்டுரைகள் ஆகியவை வினாடி வினாக்கள் போன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
குஜராத் மாநில கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது