திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (09:02 IST)

முடங்கும் வங்கி சேவைகள்: தவிப்பில் வாடிக்கையாளர்கள்!

வங்களின் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கு முந்தைய நாட்களான 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.
 
எனவே நாளை முதல் செவ்வாய்கிழமை வரை டெபாசிட், செக் கிளியரன்ஸ் போன்ற வங்கி ஆந்த பணிகள் நடைபெறாது. அதோடு ஏடிஎம் சேவைகளும் தடைப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.