புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (12:46 IST)

புடவைகளில் வந்த கொரோனா!: வியாபாரம் செம ஜோர்!

கொரோனா வைரஸால் உலகமே அச்சப்பட்டு வீடுகளில் பதுங்கி கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா டிசைன் புடவைகள் ட்ரெண்டாகி வருகிறது.

சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புகுந்து பெரும் உயிர் பலிகளை கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக புதிய படம் ஏதாவது வெளியானால் அதில் நாயகியர் கட்டியிருக்கும் மாடல் புடவைகள் கடைகளில் விற்பனைக்கு வரும். பெண்களும் அதை விரும்பி வாங்கி அணிவர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போன்ற டிசைன்கள் போடப்பட்ட புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மற்ற புடவைகளை விட கொரோனா புடவைகளை பெண்கள் விரும்பி வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இந்த சம்பவத்தை மையப்படுத்தி நெட்டிசன்கள் இணையத்தில் பல மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.