1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (16:14 IST)

பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.. டிராபிக்கில் லஞ்ச் சாப்பிட்ட டிரைவர்..!

பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில் டிராபிக்கில் கார் நின்ற நேரத்தில் அதன் டிரைவர் மதிய உணவு சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை ,கொல்கத்தா உள்ளிட்ட பேரு நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று மூன்று மணி நேரத்திற்கு மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் டிராபிக் சரியாக சில மணி நேரங்கள் ஆகும் என்ற முடிவு செய்த தனியார் கார் ஓட்டும் டிரைவர் லஞ்ச் உணவை முடித்துவிட்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுதான் உண்மையான பெங்களூர் டிராபிக் நெரிசல் என்றும், டிராபிக்கில் கார் நிற்கும் நேரத்தில்  லஞ்ச் சாப்பிட்டுவிட்டு முடிக்கும் வரை ட்ராபிக் சரியாகவில்லை என்றும் கர்நாடக அரசு இதை ஒரு பெரும் பிரச்சனையாக எடுத்து உடனடியாக டிராபிக் சரி செய்ய வேண்டும் என்றும் பலர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Mahendran