ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (09:37 IST)

ஆண் டெய்லர்கள், ஆண் ஜிம் ட்ரெய்னர்களுக்கு தடை?? - அதிரடி உத்தரவு!

Tailor machine

உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது பல புதிய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

 

முன்னதாக பள்ளி, கல்லூரி பெண்களிடம் தொந்தரவு செய்யும் நபர்களை பிடிக்க ரோமியோ ஸ்குவாட் அமைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஜிம், யோகா பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் உள்ள தையல் கடைகளில் பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவெடுக்கக் கூடாது.

 

அதுபோல, ஜிம் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் இருபாலினர் மையமாக இருந்தாலும் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கக் கூடாது. பெண்களுக்கான பிரத்யேகா ஜிம், யோகா மையங்களில் ஆண் பயிற்சியாளரை பணியமர்த்தக் கூடாது என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K