ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (10:16 IST)

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து, டிசம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாட்களில் அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

 சபரிமலை அய்யப்பன் கோவிலில் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து, 25 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசனம் மூலம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், 25, 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மண்டல பூஜை தினத்தில் 60 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் உடனடி தரிசன பதிவு மூலம் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Edited by Siva