திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (07:16 IST)

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி: பாதுகாப்பு அமைச்சகம்

5000 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கை சரியாக சென்று அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த சோதனை தற்போது வெற்றி என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் என்பது 5000 தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்டது என்ற நிலையில் இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை தயாரிப்பு பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை வெற்றி கரமாக முடிவடைந்து உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் காண்டீபூர் என்ற பகுதியில் இந்த சோதனை நடந்ததாகவும் பூமியின் வளிமண்டலத்திற்குள் உள்ள இலக்கை இடைமறித்து  அழிக்கும் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டதாகவும் இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்பு கூடுதலாக அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் இந்த  ஏவுகணையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Edited by Siva