வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (18:31 IST)

இறந்த தாயை கட்டியணைத்து கதறிய குட்டி குரங்கு (வீடியோ)

தமிழ்நாடு - கர்நாடாகா நெடுஞ்சாலை ஒன்றில் சாலையை கடக்க முயன்ற குரங்கு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த தாயை கடியணைத்து, குட்டி குரங்கு அழுத வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.


 


 
தாய் பாசம் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை. அதுவும் பலூட்டி இனத்தை சேர்ந்த அனைத்து உயிரினங்களும் தாய் பாசம் சற்று அதிகமாகவே உண்டு. இந்தவகையில் தமிழ்நாடு - கர்நாடாகா நெடுஞ்சாலை ஒன்றில் சாலையைக் கடக்க முயன்ற குரங்கு காரில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டது. இதைப்பார்த்த குட்டிக் குரங்கு இறந்து கிடந்த தாய் குரங்கை கட்டி அணைத்துக்கொண்டு அழுதது. 
 
இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தனர். குரங்களுக்கும் மனிதர்கள் போன்று சில உணர்வுகள் உண்டு என்பதற்கு சான்றாக பல ஆராய்ச்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

நன்றி: Ruptly TV