வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (18:00 IST)

முடிந்தது மண்டல பூஜை.. அய்யப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்ததை அடுத்து நடை சாத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகை தந்தனர் என்பதும்  தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மண்டல பூஜை முடிந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இதனை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் மகர விளக்கு தரிசனம் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மகரஜோதியை பார்க்கவும் கட்டுக்கடகாமல் கூட்டம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran