குதிரை மீது வைரஸ் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு செய்த காவலர் !

karnataka
குதிரை மீது வைரஸ் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு செய்த காவலர் !
sinoj| Last Updated: செவ்வாய், 31 மார்ச் 2020 (14:31 IST)

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 37 ஆயிரத்து 846 பேர் பலியாகியுள்ளனர்.உலகம் முழுவதும் 1 லட்சத்து 65, 933 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், ஆந்திர
மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளார் ஒருவர் கொரோனா வைரஸ் போன்ற வண்ணப்புள்ளிகள் வரையப்பட்ட குதிரையில் வலம் வந்து பொதுமக்களிடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேவராமல் இருக்க பேப்பள்ளியில் காவல் உதவி ஆய்வாளர் மாருதி சங்கர் குதிரையில் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது பெரும் வரவேற்பை பெறுள்ளது.

இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரல் வைரலாகிவருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :