திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (15:05 IST)

ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்: என்னவென்று தெரிகிறதா?

கர்நாடகா மாநிலத்தில் ஏரிக்குள் ஏடிஎம் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சில இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த ஏரிக்குள் பெட்டி போல் எதோ இரண்டு பொருட்கள் இருப்பதைப் பார்த்து எடுத்துள்ளனர். 
 
துருப்பிடித்த நிலையில் இருந்த அந்தப் பெட்டியை வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது ஏடிஎம் இயந்திரம் என்பது தெரியவந்தது.
 
இயந்திரம் முழுவதும் துருப்பிடித்த நிலையில் இருந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. திருடர்கள் ஏடிஎம்மில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஏரியில் ஏடிஎம் இயந்திரத்தை வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.