செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:25 IST)

ஏடிஎம் கட்டணம் உயர்வு: இனி பார்த்து பயன்படுத்துங்க...!

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்த்தபடுவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 

 
வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க முடியும். இந்த லிமிட்டை தாண்டி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது ரூ.20 மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி உடன் ரூ.23.6 பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆர்பிஐ அனுமதி வழங்கி உள்ளது. 
 
ஆம், இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி உடன் ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.