செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (15:20 IST)

திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்

அசாம் மாநில கிராமப் புறங்களில் வறுமையில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யப்படுகிறது.

 
அசாமில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அதிகளவில் இந்த ஆபரேசன் செய்து கொள்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு ஆள்பிடிக்க சமூக நல ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு அரசு ரூ.2ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.
 
மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் கிராமப் புறங்களில் வறுமை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர்களை பண ஆசைக்காட்டி குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு சமூக ஆர்வலர்கள் அழைத்து செல்கின்றனர்.
 
இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அசாம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தங்களுக்கு மீண்டும் மறுசீரமைப்பு ஆபரேசன் செய்து குழந்தை பெற வழிவகை செய்யவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.